அஸ்வின் குமார் அவரின் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம்மில் புகைப்படம் ஒன்றை ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “குக்கு வித் கோமாளி” சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் அஸ்வின் குமார். இவருக்கென ரசிகர்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. இதனால் இவருக்கு ஆல்பம் சாங் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் இறுதியாக நடித்த “என்ன சொல்லப் போகிறாய்” என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.
அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பேசியது சர்ச்சைக்குரியதானது. அதில் அவர் கூறியதாவது,”40 கதைகளை கேட்டு நான் தூங்கினேன்” என்று அவர் பேசியிருந்தார். இதைக்கேட்ட இணையதளவாசிகள் அவரை ஸ்லீப்பிங் ஸ்டார் என்று கிண்டலடித்து வருகின்றனர். இதற்கிடையே அஸ்வின் குமாரின் ரசிகர்களை பிராங்க் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த இணைதளவாசிகள் அஸ்வினை நக்கலடித்து வருகிறார்கள். தற்போது அஸ்வின் அவரின் ஹேட்டர்ஸ்களுக்கு இன்ஸ்டாகிராம்மில் பதிலடி கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.