Categories
சினிமா தமிழ் சினிமா

“மனைவியை பிரிந்த பிறகு தனுஷ் இப்போ எங்கு இருக்குறாரு தெரியுமா”….? நீங்களே பாருங்க….!!!

நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பிறகு தன் அம்மா மற்றும்,அவரது அண்ணன் குழந்தைகளுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002-ஆம் ஆண்டு  திருடா திருடி படத்தில் நடித்து மக்களை திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 40-க்கும்  மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

தனுஷ் தற்போது தன் மனைவியை ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்போது இவர் தன் அம்மாவுடன் இருப்பதாகவும், தன் அண்ணன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |