Categories
மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு…. விழுப்புரத்தில் 20 இடங்களில்…. அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்….!!!

விழுப்புரத்தில் சுமார் 20 இடங்களில் அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கிறது.

தமிழ்நாட்டில் விழுப்புரம், உணவு தானிய உற்பத்தியில் முக்கிய மாவட்டமாக திகழ்கிறது. அங்கு காரிப் பருவ நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. எனினும் விவசாயிகள் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், இடைத்தரகர்களின் செயல்களையும் தடுப்பதற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவிருக்கிறது. விவசாயிகளின் நெல்லுக்கான தகுந்த விலை கிடைக்கக்கூடிய வகையில் மாவட்ட நிர்வாகமானது, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக செஞ்சி, மேல் எடையாளம், சத்தியமங்கலம், புதுவூர், புதுகுப்பம், ஆயந்தூர், பக்கிரிபாளையம், திருவம்பட்டு, பொன்பத்தி, எய்யில், ஆனாங்கூர், ஈச்சங்குப்பம், அன்னியூர், சுந்தரிபாளையம், இளங்காடு, ப. வில்லியனூர், கயத்தூர், பூண்டி, பொம்பூர், பொன்னம்பூண்டி போன்ற 20 இடங்களில் அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கிறது.

Categories

Tech |