அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனியில் சரக்கு விமானம் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
சீன நாட்டின் ஏர்லைன்ஸிற்குரிய போயிங் 747 என்னும் சரக்கு விமானமானது சிகாகோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் அதிகமான பனி குவிந்து கிடந்திருக்கிறது.
அதில் சறுக்கிய விமானத்தின் சக்கரம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மோதி விட்டது. இதில் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து வீடியோ இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது