Categories
அரசியல் மாநில செய்திகள்

“கழட்டிவிட்ட அதிமுக?”…. பாஜகவின் நிலை என்ன?…. அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிக இடங்களை கேட்டு நெருக்கடி கொடுத்த பாஜகவை அதிமுக கழற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பெயருக்கு சொற்ப இடங்களை மட்டும் கொடுக்க அதிமுக முன்வந்ததாகவும், அதனை ஏற்க பாஜக மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாகவும், பாஜக தனித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

Categories

Tech |