ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் பெருமாள்சாமிக்கு சொந்தமான காரில் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் சேரம்பாடி பகுதியில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனைபார்த்தது காரில் இருந்த மாரியப்பன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. .இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காரில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.