மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று செயல்களில் தேவையான சீர்திருத்தம் வேண்டும். பொறாமை உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கூடும். நேரத்திற்கு உணவு உண்டால் ஆரோக்கியம் சீராகும். இன்று வீண் அலைச்சல், டென்ஷன் கொஞ்சம் ஏற்படக்கூடும். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டு பின்னர் முடியும்.
உடல் பலவீனம் கொஞ்சம் உண்டாகலாம். திருமணம் முயற்சிகள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் சுமூகமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் இன்று பணம் மட்டும் நீங்கள் கடனாக வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். புதிய முயற்சிகளும் வேண்டாம். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்றும் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்