தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து பணியாளர்களும் எடுத்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியின் நகராட்சியில் வைத்து தீண்டாமை ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சியின் ஆணையரான பரந்தாமன் என்பவர் தலைமை தாங்கி தீண்டாமைகளின் ஒழிப்பிற்கான உறுதிமொழியை வாசித்துள்ளார்.
இதை பின்தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இவற்றில் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.