சர்வதேச இராணுவ குழுவில் பணியாற்றியவர்கள், பாதுகாப்பு படை உறுப்பினர்கள் மற்றும் பல முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தாலிபான் மற்றும் அதன் கூட்டாளிகள் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐநா சபை இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இதுபோன்ற 100 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊடக ஊழியர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் கைது செய்து தொடர்ந்து துன்புறுத்தி கொலை செய்யப்படுவதாகவும் ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.