Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்கள்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதனால் வாணியம்பாடி பேருந்து நிலையப் பகுதியில் இருக்கும் எல்.ஐ.சி அலுவலகம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பதும், வாணியம்பாடியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |