Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த மாணவி…. திருமணமானவர் செய்த செயல்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் டிரைவரான ராகவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ராகவா அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக ராகவா பலமுறை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார்.

அதன்பின் கர்ப்பத்தை கலைப்பதற்காக ராகவா மாணவிக்கு மாத்திரையை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட மாணவி வலியால் அலறி துடித்து நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் திருவெற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராகவாவை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |