Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற லாரி…. 4 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

லாரி பழுதடைந்து நின்றதால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி திடீரென பழுதாகி நடுவழியில் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |