Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிக்கிட்டா” நாடகமாடிய கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் மெக்கானிக்கான ஹரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஹரி வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் குத்தியதால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் ஹரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது குளியலறையில் ஜீவிதா தூக்கில் தொங்குவதை பார்த்த ஹரி அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஜீவிதாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரியை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மார்பில் கடுமையாக தாக்கியதால் ஜீவிதா இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் ஹரியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது குடும்ப தகராறில் ஹரி ஜீவிதாவை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் ஹரியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |