Categories
சினிமா

நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…. ஆவலில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் முக்கிய தகவல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் மிக முக்கியப் படமாக அமைந்தது. இதற்கு முன்பாக அவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று அவரின் பெயரை காப்பாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில், எஸ்.ஜே சூர்யாவும் நடித்திருக்கிறார். இதனையடுத்து இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை காலை 10 மணியளவில் இத்திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |