Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. தப்பியோடிய கும்பல்…. அதிகாரிடம் ஒப்படைப்பு….!!

ரயிலில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடிப் பகுதியில் இருக்கும் இரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயிலின் மூலமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள்கள் மூலமாக மூட்டைகள் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளங்கள், புதர்கள் மற்றும் நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ரயிலில் கடத்துவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு கும்பல் அரிசி மூட்டைகளை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரிடம் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |