கிராமத்தில் வசிக்கும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஊராட்சி தலைவர் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் இருக்கின்றது. இந்நிலையில் முன்மாதிரி கிராமமாக மண்மலை ஊராட்சியை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்பின் இந்த ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டம், குடிநீர், சாலை மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட இருக்கின்றது.
இதனை அடுத்து மண்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இக்கிராமத்தை வரைபடமாக வரைந்து ஊராட்சி தலைவர் ஜெ. தென்னரசு கிராமத்தில் எந்ததெந்த தெருவில் எத்தனை பேர் வசித்து வருகிறார்கள், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து தனிநபர் கழிப்பறை வசதி இல்லாத வீடுகளை கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி செயலாளர் தலைமையில் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.