Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செரீனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுலைகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் செரீனா தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் செரீனா மற்றும் அவரது மகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செரீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

அதன்பின் படுகாயமடைந்த சுலைகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |