Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுநரை டுவிட்டரில் பிளாக் செய்த முதல்வர்?”…. என்ன காரணம் தெரியுமா?…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கர்-க்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும் கவர்னர் தன்கர், மாநில அரசு தனது ஒப்புதலின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தாவை கடுமையாக சாடி தன்கர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த மம்தா, தன்கர் ஒரு ஊழல்வாதி எனக் கூறி அவரை திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசுக்கு மூன்று முறை கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டுக்கவே இல்லை. இதையடுத்து மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் ட்விட்டரில் ஆளுநரை பிளாக் செய்துள்ளார் மம்தா பானர்ஜி.

Categories

Tech |