கன்னி ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய நல்ல செயல்களுக்கான பாராட்டுகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை பயன்படுத்துவது நல்லது. கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். எங்கும் எதிலும் நன்மையே உங்களுக்கு இன்று கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
மனம் நிம்மதி இருக்கும், சந்தோசம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் சிறப்பாக நடைபெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் இன்றைக்கு சிறந்து விளங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் பேசும்பொழுது நிதானத்தை கடைப்பிடியுங்கள். அது எந்த இடம் என்பது உங்களுக்கு சரியாக தெரியும்.
ஆகையால் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்