பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பிரேசில் நாட்டின் தென் கிழக்கு மாநிலம் சாவ் பாவ்லா இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளில் அடங்கும்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த மாநிலத்தில் பலத்த கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகினர்.
இதுபற்றி அம்மாநில கவர்னர் ஜோவ் டோரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , மழை மற்றும் நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை மிகவும் வருத்தத்துடன் பார்வையிட்டு வருகிறேன் . மேலும் உயிரிழந்தவர்களின் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளேன் . தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.