Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்‌ஷனில் குதிக்கும் அனுஷ்கா…!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்‌ஷனில் களமிறங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது  ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும்  ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
anushka க்கான பட முடிவு
கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் இதுவும் ஒரு படம் என்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா, ஆக்‌ஷன் நாயகியாக களமிறங்க இருக்கிறாராம். இந்தி திரைப்பட இயக்குனரான கோவிந்த் நிகலானி எழுதி வைத்திருந்த கதையைத்தான் கவுதம் மேனன் படமாக இயக்க உள்ளதாக கூறுகிறார்கள்.
anushka க்கான பட முடிவு
அர்ஜுன்,கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டில் வெளியான  ‘குருதிப்புனல்’ படத்துடைய  ஒரிஜனல் படமான ‘துரோக்கால்’ தேசிய விருதுகளைப் பெற்ற படங்களை தயாரித்தவர் கோவிந்த். ரொம்ப இடைவெளிக்குப் பின் அவர் எழுதியுள்ள கதை தமிழில் படமாக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |