Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட வியாபாரி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் தங்கபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு கணேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 1 \1\2 மாதத்துக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே கணேஷ்ராஜா கடந்த சில நாட்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கணேஷ் ராஜா மின்விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷ் ராஜாவின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |