காரின் கண்ணாடியை உடைத்து செல்போன்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சந்தியா என்பவர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விளக்குத்தூண் பகுதியில் சந்தியா தனது காரில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 4 செல்போன்களை திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணாடியை உடைத்து செல்போன்களை திருடி சென்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.