ஜெர்மனியில் சூப்பர் காரில் ஒரு மணி நேரத்திற்கு 417 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிவேக வாகனங்களில் ஒன்றாக இருக்கும் புகாட்டி சிரோன் என்ற வாகனத்தின் விலை சுமார் 22 கோடியே 39 இலட்சம். இது சுமார் 1500 குதிரைகளின் திறனை உடையது. எனவே ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்நிலையில் கோடிஸ்வரரான ராடிம் பாசர், பெர்லின்- ஹனோவர் இடையில் இருக்கும் 6 வழிச்சாலையில் சுமார் 417 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார்.
அந்த நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு இல்லை. எனினும், அவர் பயணித்த வேகம் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. வாகன பந்தய வீரர் ஜெபஸ்டின் உட்பட பல மக்களும் அந்த நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். மேலும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.