Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாரி சக்தி புரஸ்கார் விருது…. எவ்வாறு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், கல்வி, விழிப்புணர்வு, சட்ட ஒழுங்கு, வன்முறை, குழந்தைகள் பாகுபாடு, என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு  மத்திய அரசு வழங்கும் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www. Awards.gov.in என்ற இணையதள முகவரியில்  விண்ணப்பிக்கலாம் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விருதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை  குடியரசுத் தலைவர் வழங்குவார்   என அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |