கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் உத்தரவிட்டார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதற்காக தூய்மை பணிகள் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக பள்ளிகல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மேலும் இறுதி தேர்வு, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். ஒருவேளை மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால். அது குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.