Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிரடி…. முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆப்பு ரெடி…. அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின் ரேஷன் கடைகள் வாயிலாக பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த வருடம் கொரோனா நிவாரணத் தொகை, இலவச மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச 21 வகை பொருட்களை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது.

அதன்பின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று இருப்பது தெரியவந்த நிலையில் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் அலட்சியமாக இருந்த அதிகரிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் அரிசி கடத்துதல் ஆகிய முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பொருட்களை அதிக விலைக்கு பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விநியோகிக்காமல் பதுக்குகின்றனர். இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தீர்ந்து விட்டது, அடுத்த மாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று காரணம் கூறுகின்றனர். இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அரிசி கடத்தல் ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் மீதி சட்ட ரீதியாக மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களின் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |