திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு தரப்பினரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் புகாரில் பூதேரி கிராமத்தில் அம்மன் கோவிலில் திருவிழா செய்து சாமி கும்பிட சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.