மீன ராசி அன்பர்களே…!!! இன்று இஷ்ட தெய்வ அருளால் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். ஆனால் வாகனத்தில் செல்லும்போது, இயந்திரங்களை கையாளும் பொழுதும், தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.
பணமிருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை இருக்கும். யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். யாருக்காகவும் எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளாதீர்கள். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவிகளை செய்யும் பொழுது, ரொம்ப கவனமாக செய்யுங்கள். அந்த நபரை பற்றிய விசாரணையுடன் அந்த காரியத்தை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை.
சிறப்பான முன்னேற்றத்தை அவர்கள் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்ட நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்