Categories
உலக செய்திகள்

“நாங்க ரெடியா இருக்கோம்”…. தகர்க்கப்பட்ட ஏவுகணை மையம்…. காத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் ….!!

ஏமனில் ஏவுகணை மையத்தை குண்டு வீசி அழித்த காட்சிகளை அமீரக ராணுவம் வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

2015-ஆம் ஆண்டு ஏமன் நாட்டு அதிபரான ஹாதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விரட்டியடித்து அந்நாட்டை கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்து ஏமன் நாட்டு இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து சவுதி அரேபியா ஏமன் நாட்டு ராணுவத்தினருக்கு ஆதரவாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனைதொடர்ந்து ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் வான்வழி தாக்குதலை நடத்தினார்கள்.

அமீரகத்தின்  படைகள் இதற்கு பதிலடியாக ஏமனில் அல்-ஜாஃப் என்ற இடத்தில் ஏவுகணை மையத்தை குண்டுவீசி தகர்த்துள்ளது. இதற்கு சாட்சியாக இது சம்பந்தமான காட்சிகளை ஐக்கிய அரபு அமீரக ராணுவ தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதனால் ஹவுதி படைகள் அமீரகத்தின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் வான்வழி கண்காணிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு தீவிரபடித்தயுள்ளது.

Categories

Tech |