ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை நத்தம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் திடீரென ஓட்டலுக்கு மேல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மணிகண்டன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.