பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு கண்ணன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கண்ணன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் கண்ணனை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கண்ணனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.