Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வராத பெண்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலா நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலாவின் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கலா சடலமாக கிடந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் கலாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |