குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுக் கோளாறால் சிரமப்பட்டுள்ளனர்.