குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை வேலாயுத நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுத நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வேலாயுத நகர் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவில்லை என்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.