Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய்” கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள வேலங்காடு கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி தனது மோட்டார் சைக்கிளை கரும்பூர்பாலம் அருகில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது அவியனூர் பகுதியில் வசிக்கும் வீரமணி, நிஜந்தன் ஆகியோர் அவ்வழியாக வந்த போது சாமுண்டீஸ்வரிடம் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய் என கேட்டுள்ளனர்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த வீரமணி மற்றும் நிஜந்தன் சாமுண்டீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி சாமுண்டிஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |