முககவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முககவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு காவல்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் முககவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.