இன்றைய பஞ்சாங்கம்
01-02-2022, தை 19, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி பகல் 11.16 வரை பின்புவளர்பிறை பிரதமை.
திருவோணம்நட்சத்திரம் இரவு 07.44 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் – 01.02.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களால் வீண்விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள்சேரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம்தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பழைய கடன்கள் குறையும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலைமிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். எதிலும் பொறுமையுடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில்லாபம் பெருகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகள் வகையில் மனநிலைகள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்றுகவனம் தேவை.
மகரம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவுஉண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். உடன்பிறந்தவர்கள்ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம்சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்றசூழ்நிலை உருவாக கூடும். தொழில்வியாபாரத்தில் பணியாட்களால்மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள்பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள்குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மைபெறலாம்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சுறுசுறுப்புடன்காணப்படுவீர்கள். கடினமான காரியத்தைகூட எளிதில் செய்து முடித்து வெற்றிபெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம்வாங்கும் யோகம் உண்டு. உங்களின்பிரச்சினைகள் குறைய உறவினர்கள்உதவியாக இருப்பர். தொழிலில் நல்லமுன்னேற்றம் ஏற்படும்.