விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக, ’விக்ரம்-58’ படத்தை இயக்குக்கின்றார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.
இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என்று முழுக்க முழுக்க மாறுபட்ட கதையோடு பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் தலைப்பிற்கான வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .