மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அப்தாஹிர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது சகோதரன் வீட்டின் மொட்டை மாடியில் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி அப்தாஹிர் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த அப்தாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்தாஹிரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.