Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்?…. நிர்மலா சீதாராமன் சொன்ன குட் நியூஸ்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் ஆகிய பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும். அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |