Categories
தேசிய செய்திகள்

அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு… அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை… நிர்மலா சீதாராமன்..!!

அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.

ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகிலுள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |