சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் பணிபுரியும் துணை விமானி தமிழில் அறிவிப்பு செய்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணிபுரிபவர் சரவணன் அய்யாவு. இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இதனால், பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழில் அறிவிப்பு செய்யும் காணொலியை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, அதனை நனவாக்குவதற்கு அனுமதியளித்த விமானத்தின் கேப்டனுக்கு நன்றி’ என தெரிவித்திருந்தார்.