தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் வைத்து தர்பணம் கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற சவுந்திரநாயகி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஆற்றங்கரையில் ஆடி அம்மாவாசை மற்றும் தை அம்மாவாசையில் முன்னோர்களுக்கு திதி -தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்று தை அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் ஆற்றங்கரையில் குவிந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அமைத்த தடுப்பு பாதையில் பொதுமக்கள் வரிசையாக சென்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் ஆற்றங்கரைக்கு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துள்ளனர்.