Categories
தேசிய செய்திகள்

“வீடில்லாத 18 லட்சம் பேருக்கு”…. 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள்… அதிரடி பட்ஜெட்..!!

வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தபின் ஆற்றிய உரையில், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும்.

ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகிலுள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம். ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டது.சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பதுதான்.

நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.. நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |