கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் நாரோதம்ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு டாக்டரான ஸ்ரீமவர்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீமவர்சன் தனது தாய் பாரதியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இவர் பழவேலி பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீமவர்சன் மற்றும் பாரதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் மகனின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.