மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார்.. பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்..
மத்திய நிதிநிலையறிக்கையின் முக்கிய அம்சங்கள் :
சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
எரிசக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலேயே டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.2025 ஆம் ஆண்டுக்குள் 100% ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி உருவாக்கப்படும்.. நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும். அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும். வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து செய்யப்படும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.