வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காங்கேயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரி கணவாய் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது லோடு ஒரு புறமாக சாய்ந்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.