Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் குழந்தையை காணவில்லை” வசமாக சிக்கிய தம்பதியினர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கணவன், மனைவி இருவரும் இணைந்து ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஹேமந்த் குமார் தனது மனைவி லட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளின் ஒரு மாத ஆண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஹேமந்த் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு தம்பதியினரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தம்பதியினர் பெங்களூரை சேர்ந்த மஞ்சு மற்றும் கோமளா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் ஹேமந்த்குமாரின் ஒரு மாத ஆண் குழந்தையை கடத்தியவர்கள் என்பதும் உறுதியானது. அதன்பின் மஞ்சு மற்றும் கோமளாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |