Categories
உலக செய்திகள்

“நான் தலைமறைவா இல்ல டா… எனக்கு “வேற நோய்” வந்துட்டு…. வலுவடைந்த போராட்டம்… அதிரடி கொடுத்த “ஜஸ்டின் ட்ரூடோ”….!!

கனடாவின் பிரதமர் அந்நாட்டில் நடந்த போராட்டத்தை கண்டு ஓடி மறைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கனடாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே எல்லையை கடக்கும் ட்ரக் டிரைவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான டிரக் டிரைவர்கள் தலைநகர் ஒட்டாவாவில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடன் அந்நாட்டில் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் கூட்டமும் ஒன்று சேர்ந்துள்ளது.

இந்த போராட்டம் வலுவடைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு காரணமாக தனது குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தான் நலமாக இருப்பதாகவும், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |